--- --:--:-- --

நீச்சலில் ஈடுபட்டிருந்த 40 பேரை தாக்க வந்த சுறா..!

2

ஜாஸ் என்ற ஹாலிவுட் படத்தில் வருவதுபோல நடுக்கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டவர்களைத் தாக்க வந்த சுறா மீனை எந்திரத் துப்பாக்கியால் சுட்டு விரட்டிய கடற்படையினர் 40 பேரை பத்திரமாக மீட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்காவின் கிம்பல் நகரில் பசிபிக் கடலில் சொகுசு கப்பல் ஒன்றில் இருந்து கடலுக்குள் இறங்கிய 40 பேர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராட்சத சுறாமீன் ஒன்று நீச்சல் அடித்தவர்களை வட்டமிட்டதும் உயிர் பிழைக்க எண்ணி சிலர் உடனடியாக கப்பலில் ஏறி விட பலர் கப்பலை விட்டு சற்று தொலைவிற்கு சென்று விட்டனர்.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த கடற்படை வீரர்கள் சுறா மீது துப்பாக்கி சூடு நடத்தினர். ஒருகட்டத்தில் நீச்சலில் இருந்தவர்களை நோக்கி சுறா முன்னேறிய நிலையில் மூன்றாவது முறையாக துப்பாக்கியால் சுட்டு சுறாவை விரட்டியதோடு கடலில் தத்தளித்த 40 பேரையும் சிறிய படகில் பத்திரமாக மீட்டனர்.

 

அனைவரும் மீட்கப்பட்ட பின்னரும் கூட அந்த கப்பலை சுறா வட்டமிட்டு வந்தது.

Leave a Reply

Right Menu Icon