--- --:--:-- --

25பைசா நாணயத்துக்கு கோழி பிரியாணி..!

4

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் தனியார் உணவகம் 25 பைசா நாணயத்தைக் கொண்டு வந்தவர்களுக்கு பிரியாணி வழங்கியது. 1957-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 25 பைசா நாணயம் நாலணா மற்றும் கால் ரூபாய் என்றும் அழைக்கப்பட்டது.

 

கடந்த 2011ஆம் ஆண்டு 25 பைசா உள்ளிட்ட குறைந்த மதிப்புடைய நாணயங்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள முஜீப் பிரியாணி என்ற உணவகம் மகளிர் தினத்தை முன்னிட்டு 25 பைசா நாணயம் கொண்டுவந்த 150 பேருக்கு கோழி பிரியாணி வழங்கியது.

 

இதை தொடர்ந்து வித்தியாசமான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த கடை ஏற்கனவே குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐந்து பைசாவிற்கும் ஐந்து திருக்குறளை ஒப்புவித்த பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாகவும் பிரியாணி வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon