மகளின் காதல் கணவரை கொன்ற தந்தை விஷமருந்தி தற்கொலை
தெலுங்கானாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளின் காதல் கணவரை அவர் கண்முன்னே கூலிப்படையை வைத்து வெட்டிக் கொன்ற தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். நலகொண்டா மாவட்டம் மிர்யலகுடாவை சேர்ந்த தொழிலதிபர் மாருதி ராவின் மகள் அமிர்தா.
இவர் பிரணய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மாருதி ராவ் 2018 ஆம் ஆண்டு கூலிப்படையை ஏவி அமிர்தா கண் முன்னே பிரணயை வெட்டிக் கொன்றார். இந்த சம்பவத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாருதி ராவ் 7 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குற்ற உணர்ச்சியால் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அமிர்தா கூறியுள்ள நிலையில் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




