5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை – தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணைய பதில் மனுவுக்கு முதலமைச்சர் விஜய் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இடைத் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்த நிலையில் அனைத்து தரப்பும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




