--- --:--:-- --

பரந்தூர் திட்டத்தை தொடர வேண்டும் – உதயநிதி

4

சென்னைக்கு 2ஆவது விமான நிலையம் தேவை என்பதை உணர்ந்தே திமுக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை உருவாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு விமான நிலைய ஆணையரகம், விமானப் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் அனுமதி கிடைத்துள்ளதுடன், திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசுத் தரப்பிலும் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அற்ப அரசியல் காரணங்களுக்காக பரந்தூர் திட்டத்தை கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும், திட்டம் கைவிடப்பட்டால் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம் இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். எனவே, தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon