--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

8

மிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

குமரி கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon