--- --:--:-- --

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

01

ரலாற்றையே புரட்டி போட்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டுமா என்ற நிலை கடந்து ரூ.2 லட்சத்தை தொட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நகை பிரியர்கள் இருக்கின்றனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

 

 

அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.14,040க்கும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.11,820க்கும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் ரூ.94,560க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon