--- --:--:-- --

டாஸ்மாக்கில் 10 வகையான பிராந்திகளுக்கு தடை..!

01

டாஸ்மாக் மது விற்பனை கடையில் 10 வகையான பிராந்தி மற்றும் 1 ரம் வகையை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மது கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தரம் குறித்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் மாதிரியை சோதனை செய்தனர்.

 

 

டாஸ்மாக் மது கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் 11 வகையான மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களில் அதிக அளவில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த வகை மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon