சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் 40 கேள்விகள்: மத்திய அரசு புதிய விவரங்கள் வெளியீடு
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 40 வினாக்கள் கேட்கப்பட உள்ளதாக மத்திய அரசு முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் முன் கூட்டியே சாதிக்கான பட்டியலை வழங்கி, அதிலிருந்து தேர்வு செய்யும் நடைமுறை பின்பற்றப்படாது என்றும்; மாறாக ஒருவர் தெரிவிக்கும் சாதிப் பெயரை அப்படியே கணக்கெடுப்பாளர் பதிவெடுத்துக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கணக்கெடுப்பின் போது ஒருவர் பட்டியல் சாதியினரா (SC) அல்லது பட்டியல் பழங்குடியினத்தவரா (ST) என்பதைக் குறிப்பிடுவதோடு, அவரது குறிப்பிட்ட சாதியின் பெயரையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




