--- --:--:-- --

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு..!

3

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் அனைத்தும், கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி வரும் ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் பள்ளிகள் திறக்க ஒருவாரமே உள்ள நிலையில், இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

 

 

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வரும் 12ஆம் தேதி முதல் கடும் குளிர் நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் அதிகமாக காணப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜூன் ஒன்று அல்லது இரண்டாம் தேதி வரை ஆந்திராவையொட்டிய பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து வீசும் வெப்ப காற்று காரணமாக வட தமிழக பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருப்பதாக அவர் விளக்கி உள்ளார்.

 

 

இந்நிலையில் தலைமை செயலகத்தில் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தில் பேசப்பட்டு வருகிறது. வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் தகவல்களை வைத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து முதலமைச்சர் விஜய் உடன் ஆலோசனை செய்யப்படும். வெகு சில நாட்களில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

பள்ளிகளில் படிக்கும் நேரம் 1050 மணி நேரமாக இருந்த நிலையில் தற்போது அது 950 ஆக இருக்கிறது. மேலும் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படும் போது படிக்கும் மணி நேரம் குறையும். எனவே ஆலோசனை செய்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து தெரியப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

மேலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் தொடர்ந்து செயல்படும். அந்த திட்டங்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படும். அது வெறும் உணவுப்பொருள் இல்லை உயிர் பொருள் என்றும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Right Menu Icon