--- --:--:-- --

மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து..!

1

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளது. நீட் தேர்வை மீண்டும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

 

மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் மே 3ம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 551 மையங்களிலும், பிற நாடுகளில் 14 மையங்களிலும் நடந்த இந்த தேர்வில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் ராஜஸ்தானில் நடந்துள்ளது என தேசிய தேர்வுகள் முகமைக்கு புகார்கள் வந்தன. அதன்படி வினாத்தாள் கசிந்ததா என்று விசாரணை நடந்தது.

 

இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டன. இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து பிடிபட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தேசிய தேர்வுகள் முகமை பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசும் அதை ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மறுதேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon