--- --:--:-- --

பள்ளி திறப்பில் மாற்றம் வருகிறதா..?

1

ரு மொழிக் கொள்கைதான் தமிழக அரசின் அடிப்படையான கொள்கை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு என்பன உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

 

அதைத் தொடர்ந்து, அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களோடு அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன்பின், 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 9 பாடப் புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதியும், 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றார். மேலும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும், அதற்காக ஜூன் 1 முதல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

 

மத்திய கல்வி அமைச்சகத்தின் பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்குமா என்ற கேள்விக்கும் அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார். வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon