--- --:--:-- --

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு..!

1

மிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 01 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் உடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், திட்டமிட்டப்படி ஜூன் 01 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போது அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கான இலாகா அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இலாகா ஒதுக்கப்பட்ட 9 அமைச்சர்கள் உடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தங்கள் துறையின் உள்ள தேவைகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகியவை குறித்தும் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் ஆலோசிக்கப்பட்டது.

 

இதனை தொடர்ந்து கோடைகால விடுமுறை முடித்து பள்ளிகள் திறப்பு குறித்தும், நாளை மறுநாள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் நாளை மறுநாள் (மே 20) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டமிட்டப்படி ஜூன் 01 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஒன்றாம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 04 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon