--- --:--:-- --

ரூ.1 கோடிக்கு மேல் பணம் பறிமுதல்

7

சென்னை பட்டினப்பாக்கத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி என்பவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது இந்த பெரும் தொகை சிக்கியது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த இந்தப் பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon