மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135 பி பிரிவின் கீழ் நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; புகார் அளிக்க மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்