உணவின்றி பப்ஜி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு..!
ஆந்திராவில் நாள்கணக்கில் உணவு, நீர் கூட இன்றி ஆன்லைனில் பப்ஜிக்கு விளையாடிய சிறுவன் இறந்துள்ளான். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் விஜ்லகுண்டா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுவன் தொடர்ந்து பல நாட்களாக உணவு உண்ணாமலும் குடிநீர் கூட குடிக்காமலும் பப்ஜி விளையாடி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக உடல் பலவீனம் அடைந்து அந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தார்.






