--- --:--:-- --

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது..!

9

மிழகத்தில் இயக்கப்பட உள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் அளிக் கப்பட்டிருக்கும் நிலையில் வரும் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்குகிறது.

 

சென்னையிலிருந்து மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும் மறுமார்க்கத்தில் இந்த பகுதிகளில் இருந்து சென்னைக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

மொத்தம் 13 ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்து இருக்கும் நிலையில் அதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அனைத்து பயணிகளும் பயண நேரத்தில் 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையம் வர வேண்டும் என்றும் கொரொனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon