--- --:--:-- --

திருச்சியில் கந்துவட்டி பிரச்சனையில் சிக்கிய நடிகர்..!

10

திருச்சியில் கந்துவட்டி பிரச்சனையில் ரயில்வே ஊழியரை கடத்தி தாக்குதல் நடத்திய வழக்கில் திரைப்பட நடிகரை காவலர்கள் தேடி வருகின்றனர். திருச்சி நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது மூன்று பேரால் கடத்தப்பட்டார்.

 

பின்னர் இன்னொரு பகுதியில் கட்டி வைத்து மூன்று பேரும் ஆறுமுகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் காவலர்கள் நடத்திய விசாரணையில் கந்துவட்டி கொடுமையால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.

 

நடிகர் ஜெரால்டு கடந்த 2019ஆம் ஆண்டு ஆறுமுகத்திற்கு 35,000 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும், முறையாக வட்டி கட்டி வந்த நிலையில் தற்போது பொது முடக்கத்தால் சில மாதங்களாக செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் ஜெயராஜ் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் நடிகர் ஜெரால்டு அவரது நண்பர் விசுவையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon