--- --:--:-- --

கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த நொடியே உயிரை விட்ட மனைவி..!

5

ணவன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சோக சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது. ஜெயகொண்டம் பகுதியைச் சேர்ந்த 80 வயதான முத்து என்கிறவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

 

வீட்டின் அருகே முத்தையனின் உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்கை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கணவரின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்த 70 வயதான அவரது மனைவி குப்பாயி மனவேதனை தாளாமல் கதறி அழுதார்.

 

அப்பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்ததில் குப்பாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்களை மிகுந்த சோகத்தை ஆழ்த்தியது. பின்னர் இருவரின் உடல்களும் சொந்த கிராமத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது.

 

Right Menu Icon