--- --:--:-- --

இன்று டெல்லியில் நடக்கப்போகும் போராட்டம்.. ஆம் ஆத்மி – இந்தியா கூட்டணிக்கு அழைப்பு..!

4

ரவிந்த் கெஜ்ரிவால் வழக்கை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

 

டெல்லி ராம் லீலா மைதானத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் போராட்டம் நடத்த இந்தியா கூட்டணி தெரிவித்துள்ளது. கட்சி ஏற்பாடு செய்துள்ள போராட்டம் மற்றும் பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி சரத்பவார் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மனைவி, போராட்டத்தில் திமுக விடுதலை சிறுத்தைகள், திரிணாமுல் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்கும் போராட்டம் என்பதால் டெல்லி நகர் முழுவதும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon