செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தார் நடிகர் விஜய் சேதுபதி..!
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தார். எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை பானம் தொடர்பான நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தமிழர் பாரம்பரிய உடையில் விவசாயிகளுடன் கலந்து கொண்டார்.
இவரது வருகை குறித்த தகவல் அறிந்ததும் ஊடகவியலாளர்கள் ஹோட்டலுக்கு விரைந்தனர். 800 என்ற திரைப்படம் தொடர்பாக அண்மையில் சர்ச்சை எழுந்ததால் மேடையில் பேசுவதை தவிர்த்த நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்கள் சந்திப்பதையும் தவிர்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.






