--- --:--:-- --

அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொரொனா கட்டுக்குள் வரும்..!

7

கொரொனா பரவலின் உச்சத்தை கடந்து விட்டோம் என்றும் தொற்று அடுத்த ஆண்டே பிப்ரவரிக்குள் கட்டுக்குள் வரும் என்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க ஐஐடி பேராசிரியர் எம் வித்யாசாகர் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.

 

கொரொனா தடுப்பு குறித்து மத்திய அரசு முக்கிய முடிவுகள் எடுக்கவும் திட்டங்களை வகுக்கவும் அந்த குழு உதவி செய்யும். இந்த வல்லுநர் குழு இந்தியாவில் கொரொனா பரவல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டது.

 

அதில் நாம் கொரொனா பரவல் உச்சத்தை செப்டம்பர் மாத பாதியில் கடந்து விட்டதாகவும் மத்திய அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்றினால் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு பொது முடக்கம் பிறப்பிக்காமல் இருந்திருந்தால் தற்போது உச்சத்தின் போது ஏற்பட்ட பாதிப்பை விட 15 மடங்கு பாதிப்பு ஜூன் மாதத்தில் ஏற்பட்டிருக்கும் என்று கணித்துள்ளது. அதாவது பொது முடக்கம் அமல்படுத்தாமல் இருந்திருந்தால் ஜூன் மாதம் வரையில் 140 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என குழுவின் தலைவர் எம் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

 

பண்டிகைகள் வரவிருப்பதாலும், குளிர் காலம் என்பதாலும் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கும் நிபுணர்கள் குழு இனி முழுமையான பொது முடக்கம் பிறப்பிக்க அவசியம் இல்லை என்றும் ஆனால் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடைமுறைகளை அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon