சாவிலும் பிரியாத காதல் மனைவி.. இறந்த செய்தியை கேட்டு கண் மூடிய கணவன்..!
ஆவடி திருவள்ளூரில் மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை ஆவடி திருவேற்காடு நகரை சேர்ந்தவர் ராஜா – மல்லிகா தம்பதி சில நாட்களுக்கு முன் மல்லிகை மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அறிந்து அவரது கணவர் ராஜாவுக்கும் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சுகத்தை ஏற்படுத்தியுள்ளது.





