கதண்டு கடித்ததில் கூலி தொழிலாளி உயிரிழப்பு..!
பட்டுக்கோட்டைய அருகே கதண்டு கடித்ததில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவர் இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர்.
நியாய விலை கடை அருகே உள்ள பொதுப்பணித்துறை வாய்க்காலில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென கதண்டு கடித்தது. அப்பொழுது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கொண்டு சேர்த்த பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறினார்.





