திருட்டு சரக்கு வாகனத்தில் ஆடு, மாடுகளை திருடிய இருவர்..!
சென்னையில் திருடப்பட்ட சரக்கு வாகனம் மூலமாக ஆடு, மாடுகளை திருடி வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பகிரத் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருடு போனது குறித்த புகாரில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி 7கிணறு போலீசார் விசாரணை நடத்தினார்.
அப்பொழுது காரில் வந்திறங்கிய ஒருவர் சரக்கு வாகனத்தை திருடியது தெரிய வந்ததால் அந்த வாகனத்தின் இயக்க சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரையில் கண்காணித்து மீனம்பாக்கத்தை சேர்ந்த ஸ்டாலின் மற்றும் கோகுலை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் திருட்டு வழக்குகளை தொடர்புடைய ஸ்டாலினும் கோகுலம் சரக்கு வாகனத்தை திருடி அந்த வாகனத்தில் ஆடு மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.





