பெண் ஐபிஎஸ்-க்கு பாலியல் தொல்லை வழக்கு.. இன்று வரப்போகும் அதிரடி தீர்ப்பு..!
பாலியல் வழக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையை நீதிமன்றத்திற்கு மாற்ற கூறிய முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ் தாசன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிவப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.





