--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

5

மிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 

இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களிலும் அதற்கு அடுத்து வரும் மூன்று நாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

 

இன்று அதிகாலை சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

நேற்றைய தினம் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

 

Right Menu Icon