ஆன்லைன் தேர்வில் முறைகேட்டை தடுக்க புதிய விதி..!
கல்லூரி மாணவர்கள் வாட்ஸ்அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும், அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் ஆன்லைன் தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக எழுதப்பட்ட விடைத்தாள்களை கல்லூரிகளுக்கு அஞ்சல் மற்றும் கொரியர் வாயிலாக அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்கும் வகையில் மாணவர்கள் எழுதும் விடைத்தாள்கள் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே மதிப்பீடு என்கிற புதிய நடைமுறை அமலுக்கு வருவதாகவும் உயர்கல்வித்துறை கூறியுள்ளது.





