--- --:--:-- --

2 மாத குழந்தையை அடகு வைத்து சூதாடிய தந்தை ..!

4

து மற்றும் சூதாட்டத்திற்காக 2 மாத குழந்தையை விற்ற தந்தை உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி உறையூர் கீழமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலாம். இவரது மனைவி ஹைருன்னிஷா.

 

இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அண்ணாநகரை சேர்ந்த ஆரோக்யராஜ் மூலமாக தொட்டியத்தை சேர்ந்த சந்தானகுமார் என்பவரிடம் அப்துல் சலாம் ஆண் குழந்தையைப் விற்றுள்ளார்.

 

இந்த குழந்தையை விற்று 80,000 ரூபாயை தவணை முறையில் பெற்றவர் அதனை மதுவிற்கும், சூதாட்டத்திற்கும் செலவிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஹைருன்னிஷா போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் குழந்தையின் தந்தை அப்துல் சலாம், ஆரோக்கியராஜ், சந்தானம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

 

மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon