--- --:--:-- --

நடிகை மீரா மிதுனுக்கு சம்மன்..!

5

ன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடிகை மீரா மீது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் விடுத்துள்ளது. பட்டியலினினத்தவரை அவதூறாக பேசி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஏழு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் மீரா மற்றும் அபிஷேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆகஸ்ட் 14ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

 

இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

 

இந்த வழக்கு இன்று சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் வந்தது. குற்றப்பத்திரிக்கை நகல் பெறுவதற்காக 17ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon