--- --:--:-- --

2 தொகுதி இடைத்தேர்தல்..!

6

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் இவ்விரு தொகுதிகளுக்கும் உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

 

 

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 165 பள்ளிகள், இடைத்தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களாகச் செயல்படவுள்ளன. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வாக்குச்சாவடி அலுவலர் பணியில் ஈடுபடவிருப்பதால், தாராபுரத்தில் 266 பள்ளிகளும், திருப்பூரில் 61 பள்ளிகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 21 பள்ளிகள் என மொத்தம் 348 பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் வாக்காளர்கள் 12 அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை
எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ பணி அடையாள அட்டை
வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன்)
மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை (தொழிலாளர் அமைச்சகம்/ ஆயுஷ்மான் பாரத்)
ஓட்டுநர் உரிமம்
நிரந்தர கணக்கு எண் அட்டை
ஸ்மார்ட் அட்டை ஆர்.ஜி.ஐ-ஆல் வழங்கப்பட்டது.
இந்திய பாஸ்போர்ட்
ஓய்வூதிய ஆவணம்
பணி அடையாள அட்டை
நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை
யு.டி.ஐ.டி மாற்றுத்திறனாளி அட்டை
வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை அல்லது சேதமடைந்து விட்டால் வாக்காளர்கள் அங்கீகரிக்கப்பட்ட இந்த 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon