தமிழகத்தில் 3 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்..!
சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரொனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரொனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நவம்பர் மூன்றாவது வாரத்தில், கடைசி வாரத்தில் மூன்று மாவட்டங்களிலும் பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.






