வெள்ளத்தில் சிக்கிய இரட்டை பச்சிளங் குழந்தைகள் மீட்பு..!
கன்னியாகுமரியில் பெரும் வெள்ளத்தில் சிக்கிய இருட்டை பச்சிளம் குழந்தைகளை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர் மீட்புக்குழுவினர்.
தொடர் கனமழையால் பெரு வெள்ளத்தில் சிக்கியுள்ள கன்னியாகுமரியில் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் தீயணைப்பு துறையினர். குடியிருப்பில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகளை மீட்ட வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
குளச்சல் அருகே உள்ள பிள்ளையார் குளம் உடைந்து வெள்ளம் பாய்ந்தோடியது. வீடுகளில் புகுந்த வெள்ளம் பாதியளவு உயர்ந்ததால் அங்கிருந்த மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினரும், காவல் துறையினரும் ஈடுபட்டனர்.
பிறந்து மூன்று மாதங்களே ஆன இரட்டை பச்சிளம் குழந்தைகளுடன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். கயிறு கட்டி சென்ற தீயணைப்புத்துறையினர் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பெரிய அண்டாவில் குழந்தைகளை வைத்து கரையை கடந்து பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பெற்றோர் மட்டுமல்லாமல் அந்த பகுதி மக்களும் அதிகாரிகளும் மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.






