--- --:--:-- --

காதலை ஏற்க மறுத்த இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞன்..!

2

விசாகப்பட்டினத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

ஹர்ஷவர்தன் ரெட்டி என்ற இளைஞரும், அந்தப் பெண்ணும் பஞ்சாபில் ஒன்றாக கல்லூரி படிப்பை முடித்து ஆந்திரா திரும்பி வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த ஹர்ஷவர்தன் அந்தப் பெண்ணை போனில் அழைத்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

 

உடன் படித்தவள் என்ற நட்பில் அந்த பெண்ணும் அங்கு சென்றுள்ளார். அவரிடம் ஹர்ஷவர்தன் தன் காதலை தெரிவித்ததாகவும் அதனை இளம்பெண் ஏற்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. அறுபது விழுக்காட்டுக்கு மேல் தீக்காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon