தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது..!
கலை, அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைவரும் தேர்ச்சி என்று கூறப்பட்ட நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்ச்சி என்றும் அரியர் தேர்வுகள் ரத்து என்றும் அறிவிக்கப்பட்டது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்ததற்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.






