நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரொனா தடுப்பூசி காரணமல்ல ..!

டிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரொனா தடுப்பூசி காரணமல்ல என்று மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் 17ஆம் தேதி உயிரிழந்தார்.

 

இதனால் சற்று ஆழமாக ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வில் தடுப்பூசியால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையில் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இருக்க கூடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.