குழந்தைகள், பதின்பருவத்தினருக்கு எப்போது தடுப்பூசி?
நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதை அறிவியல் ரீதியாகவும் இருப்பதை பொறுத்து முடிவு செய்யப்படும் என விகே பால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செயலாளருடன் பேசிய விகே பால் குழந்தைகளுக்கு எப்போது தொடங்கப்படும் என்று காலவரையறை நிர்ணயிப்பது தற்பொழுது கடினமானது என குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் எப்பொழுது சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பதை தடுப்பூசி செலுத்துவதற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைகூடம் தெரிவிக்கும் என்றும் விகே பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 12 முதல் 18 வயதுடையவர்களுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. ஊசி வழியாக இல்லாமல் சொட்டு மருந்து மூலமாக செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவசர கால தடுப்புமருந்து பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.






