--- --:--:-- --

முதன் முதலாக வெப் தொடரில் நடிக்கும் திரிஷா..!

4

டிகை த்ரிஷா முதன் முதலாக வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா பரவி வந்த நிலையில் சினிமாத்துறை முடங்கியது.

 

இதனால் ஓடிடி தளம் பிரபலமானது. அந்த அடிப்படையில் இந்த தொடர்களும் பெரிய அளவில் பிரபலமானது. தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சினிமாவை விட அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது.

 

இதன் காரணத்தால் நடிகைகளின் பார்வை மாறியது. வெப் தொடர்களில் மீனா, காஜல் அகர்வால், நித்யாமேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால், சமந்தா ஆகிய நடிகைகள் நடித்து வருகின்றனர். தற்போது தென்னிந்திய நடிகையான த்ரிஷா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இவரது முதல் வெப் தொடருக்கு பிருந்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Right Menu Icon