மெட்டி ஒலி சீரியல் விஜி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!
கடந்த 2002ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் வெளியான மெட்டி ஒலி சீரியல் அறிமுகமானவர் உமாமகேஸ்வரி. மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெண்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார் உமாமகேஸ்வரி. மெட்டி ஒலி சீரியல் சீரியல் இயக்குனர் திரு முருகனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்தவர் உமாமகேஸ்வரி.
வெற்றிக்கொடிகட்டு ,உன்னை நினைத்து, அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரின் கணவர் முருகன் கால்நடை மருத்துவராக இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு அவர் தொடர்களில் நடிக்க வில்லை.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மகேஸ்வரி ஈரோட்டில் உள்ள தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். திடீரென மயங்கி விழுந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.






