தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று ஆலோசனை ..!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் 21 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் மாவட்டம் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு கொரொனா வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பாதுகாப்பானதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும், ஊரடங்கு குறித்த அறிவிப்பு மாலை அல்லது சனிக்கிழமை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






