--- --:--:-- --

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் ..!

3

த்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

 

இதனால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மதிப்பெண் கணக்கிடும் முறை ஏற்கனவே வெளியிடப்பட்டது.

 

இந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி காலை 11 மணி முதல் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே பள்ளி மாணவர்கள் www.tndge.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon