இரும்பு பைப்பால் காவலாளியின் மண்டையை உடைத்த காதல் ஜோடி..!
சென்னை அடுத்த ஆவடி அருகே குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளிகள் மண்டையை உடைத்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
நேற்றிரவு புருஷோத்தமன் காவல் பணியில் இருந்தபோது அங்கு வசிக்கும் இளம் பெண் ஒருவர் இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் தோழியுடன் மதுபோதையில் வளாகத்தில் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த புருசோத்தமன் அவர்களுக்கு அறிவுரை கூற முற்பட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து கைகளால் தாக்கியவர்கள் அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து புருஷோத்தமன் தலையில் அடித்ததில் படுகாயமடைந்தார்.
இதுதொடர்பான புகாரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காதலர்களை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






