தனியார் பள்ளிகளின் கட்டணம் குறித்து இன்று உத்தரவு..!
நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கட்டணம் குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. குடிப்பழக்கம் காரணமாக கல்வி கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 80 சதவீத கட்டணத்தை வசூலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் எனவும் தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநில பள்ளிகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளிகள் கட்டணம் தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.






