சவரனுக்கு ரூ.760 குறைந்தது விலை!
கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சவரனுக்கு ரூ.760 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,720-க்கு விற்பனையாகிறது.
அக்டோபர் 12: அன்று காலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,10,720-க்கும் (கிராம் ரூ.13,840), மாலையில் மேலும் சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,09,760-க்கும் (கிராம் ரூ.13,720) விற்பனையானது. அக்டோபர் 13 (நேற்று): சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





