சென்னையில் 130 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள்: விஜய் தொடங்கி வைத்தார்
சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 130 புதிய தாழ்தள குளிர்சாதன (AC) மின்சாரப் பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பச்சைக்கொடி அசைத்து இந்த புதிய மின்சாரப் பேருந்து சேவைகளை அவர் தொடங்கி வைத்தார். நகரின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், பயணிகளுக்குப் நவீன மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கவும் இந்த மின்சாரப் பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




