--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்ட இளம் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு..!

8

கொரொனாவால் பாதிக்கப்பட்ட இளம் கர்ப்பிணி மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சர்ம நோய் மருத்துவர் கார்த்திகா என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நடந்துள்ளது.

 

கொரொனா இரண்டாவது அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த கார்த்திகா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் கணவர் வீட்டார் வற்புறுத்தலின் பேரில் அந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்ததாக தெரிகிறது.

 

இந்த நிலையில் மருத்துவர் கார்த்திகா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவர் கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

வளைகாப்பு நிகழ்ச்சியே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டது என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon