காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை..!
கடலூர் மாவட்டத்தில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதனுக்கு 22 வயதில் திலகவதி என்ற மகள் இருந்துள்ளார்.
பக்கத்துவீட்டில் கோபி என்ற இளைஞர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுநாதனின் மகள் திலகவதிக்கும் கோபிக்கும் காதல் மலர்ந்துள்ளது. தொடர்ந்து திலகவதியும் கோபியும் நெருக்கமாக பழகியுள்ளனர்.
அண்மையில் கோபியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி திலகவதி கூறியுள்ளார் .அதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த திலகவதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திலகவதி அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திலகவதி உயிரிழந்துள்ளார். மேலும் திலகவதியின் வீட்டில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அதில் காதலன் கோபி மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் திலகவதி. அதில் தன் சாவிற்கு காரணம் கோபி என்று கூறியுள்ள அவர் கோபி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் பல முறை தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோபி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். இதனால் 50க்கும் மேற்பட்ட திலகவதியின் உறவினர்கள் கோபி மற்றும் அவன் குடும்பத்தாரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனக்கூறி விருத்தாச்சலம் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திலகவதியின் தந்தை மஞ்சுநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வேப்பூர் போலீசார் கோபியை தேடிவந்தனர். இந்த நிலையில் திடீரென வேப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காதல் பிரச்சினையால் திலகவதி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






