--- --:--:-- --

நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 60 ரூபாயாக குறைக்கப்படும்..!

3

கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 60 ரூபாயாக குறைக்கப்படும் என மாநில பாஜக மூத்த தலைவர் ராஜசேகர் உறுதியளித்துள்ளார். கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 

கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகர் கேரள மக்கள் தங்களை தேர்ந்தெடுத்தால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார்.

 

பெட்ரோல் விலைக்காக மத்திய அரசை விமர்சிக்கும் கேரளாவின் ஜனநாயக முன்னணி அரசு பெட்ரோல் டீசலை ஜி‌எஸ்‌டியின் கீழ் கொண்டுவர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon