தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய கூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






