விவசாயிகள் போராட்டம் 46 ஆவது நாளாக தொடர்கிறது..!
டெல்லியில் கடும் குளிரிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 46 ஆவது நாளாக தொடர்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது.
ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றனர். சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக கூறிய நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்பதில் விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.






